இரண்டு இலட்சம் பேரைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தில், 2500 பேரைத் தவிர ஏனையோர் அனைவரும் சிங்கள பௌத்தர்களே என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

“சிறிலங்கா இராணுவத்தில் உள்ளவர்களில் 99 வீதமானோர் சிங்கள பௌத்தர்களேயாவர்.

இரண்டு இலட்சம் பேர் சிறிலங்கா இராணுவத்தில் உள்ளனர். இவர்களில், 1600 கிறிஸ்தவர்களும், 700 முஸ்லிம்களும் இருக்கின்றனர். இந்துக்கள் வெறும் 200 பேரே உள்ளனர்.

எனினும், இராணுவத்துக்குள், இன, மத, சாதி பேதங்கள் எதுவும் கிடையாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version