யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றை நேற்றிரவு இனந்தெரியாத சிலர் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
வீட்டிலேயே மூவர் மாத்திரம் வசித்து வந்த நிலையில் இரவு ஒன்பது 9.00 மணியளவில் திடீரென்று உட்புகுந்த கும்பல் வீட்டில் கண்ணாடிகள், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றை உடைத்து சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர்.