வவுனியா – செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இன்று அதிகாலை  இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் உள்ள பிரதான வீதிக்கு முன்பாக இளைஞர் ஒருவரின் சடலம் வீதியில் காணப்பட்டமை தொடர்பாக பறயனாலங்குளம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச் சம்பவத்தில் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த பா.நிரோஜன் வயது 35 என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதுடன் அவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த நபரின் சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை அவ்வீதியால் பயணித்த வாகனங்கள் மோதிவிட்டு தப்பிச்சென்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version