கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ்; பரவலைத் தடுப்பதற்காக இத்தாலி முழுவதும் மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்து. மக்கள் அனைவரையும் வீடுகளிலிலேயே இருக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இத்தாலியில் கொவி;ட்-19 வைரஸினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 463 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்நாட்டில் 9172 பேருக்குத் இத்தொற்று ஏற்பட்டுள்ளது.

Italians-told-to-stay-home-in-desperate-bid-to-limit-virus

ரோம் நகரிலுள்ள சிறையொன்றின் கைதிகளை குடும்பத்தினர் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பொலிஸாருடன் மக்கள் மோதல்.


இத்தாலியின் 15 மாகாணங்கள் மக்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஜுசுப்பே கொன்ட்டே கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

ஆனால், தற்போது நாடு முழுவதும் இந்த கட்டுப்பாடுகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

இத்தாலிய மக்கள் அனைவரையும் வீடுகளிலேயே இருக்குமாறும் அவசிய பயணத்  தேவைகளுக்கு அனுமதி பெற வேண்டும் எனவும் பிரதமர் ஜுசுப்பே கொன்ட்டே நேற்று தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 3 ஆம் திகதிவரை பொது ஒன்றுகூடல்கள் தடுக்கப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply