கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி காரணமாக இராணுவச் சிப்பாய் ஒருவர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மன்னார் இராணுவ முகாமில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, மற்றொருவர் வவுனியாவிலிருந்து அழைத்து செல்லப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சைப் பிரிவில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.