சர்வதேச பயணிகள் கப்பலான எம் எஸ் சீ மெக்னிபிகா (MSC Magnifica) கப்பலில் இருந்து கடந்த 6 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோய்காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த ஜேர்மனியப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இத்தாலியில் இருந்து புறப்பட்ட எம் எஸ் சீ மெக்னிபிகா (MSC Magnifica) கப்பல் மீண்டும் இத்தாலிக்கு ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி திரும்பியபோது இலங்கையில் எரிபொருள் நிரப்ப நிறுத்தப்பட்டது.

அப்போது அதில் சமையலறை உதவியாளராக பணிபுரிந்த இலங்கை இளைஞர் ஒருவர் இலங்கையில் இறங்க அனுமதி கோரியிருந்தார்.

இலங்கையர் ஒருவர் இறங்குவதற்காக கொழும்பு துறைமுகத்தில் தரித்த எம்.எஸ்.சி.மெக்னிபிகா கப்பலில் பயணித்த இருதய நோயாளரான 75 வயது மதிக்கத்தக்க ஜேர்மன் பெண் நோய்வாய்ப்பட்ட நிலையில் அன்றையதினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் குறித்த ஜேர்மன் பெண் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version