யாழ். கோப்பாய் பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய குற்றச்சாட்டில் கடந்த இரு நாட்களில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடியமை மற்றும் உரிய அனுமதியின்றி  வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்கள் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version