லண்டன் நகரில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்;. ஒரு வயதுடைய பெண் குழந்தையும் மூன்று வயதுடைய ஆண்குழந்தையும் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இக்குழந்தைகள் தமது தந்தையால் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இக்குழந்தைகளின் தந்தையான 40 வயதான நிதின் குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்று காயமடைந்த நிலையில் பொலிஸ் காவலுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இக்கத்திக்குத்து தொடர்பாக வேறு யாரையும் தாம் தேடவில்லை என பொலிஸர்ர தெரிவித்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த இந்தக்குடும்பம் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் லண்டனுக்கு குடிபெயர்ந்தவர்கள். நிதின்குமாhர் கடையொன்றில் பணியாற்றி வந்தார்.

இக்குடும்பத்தினர் கிழக்கு லண்டன் இல்போர்ட் அலட்ப்றோ றோட் நோத்தில் உள்ள விநாயகன் ஸ்ரோர்ஸுக்கு மேல் வசித்து வந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை மேற்படி குழந்தைகள் குத்திக் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பெண் குழந்தை ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாகவும் ஆண் குழந்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளது.

கத்திக்குத்து சம்பவத்தின் பின், இக்குழந்தைகளின் தாய், உதவுங்கள், இவர்கள் எனது பிள்ளைகள் வீறிட்டு அழுத்தார் என அயலவரான ரேஷ்னா பேகம் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version