கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கடந்தவாரம் காணாமல் போன பாடசாலை மாணவன் இன்று (03.05.2020) சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

தர்மக்கேணி அ.த.க.பாடசாலையில் கல்வி கற்றுவந்த பளை முள்ளியடியை சேர்ந்த  ஆர். அனோஜன் என்ற  மாணவன்  கடந்த 28 ஆம் திகதி  பளை பொலிஸ் நிலையத்தில்  காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து தேடுதல் மேற்கொண்ட  பொலிஸார்

பளை புளோப்பளை காற்றாலை மின் உற்பத்தி பகுதியில் அமைந்துள்ள கடல் நீரேரியில் சடலமாக அடையாளம் கண்டுள்ளனர். கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version