மஹர சிறைச்சலையில் இருந்த சிறைக்கைதிகள் 7 பேர் தப்பியோட மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறு தப்பிச்செல்ல முற்பட்ட 7 கைதிகளில் 6 கைதிகள் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மதில் ஏறி தப்பிக்க முற்பட்டவேளை, சிறைக்கைதிகளில் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 38 வயதுடைய நபரென முதல் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

