உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை குணப்படுத்தும் வகையிலான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இந்த வைரசின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 36 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 21 லட்சத்து 84 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவர்களில் 50 ஆயிரம் பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இதுவரை 11 லட்சத்து 69 ஆயிரத்து 405 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனாலும், இந்த கொடிய கொரோனாவுக்கு உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 70 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்துள்ள நாடுகள்:-

அமெரிக்கா – 69,008
ஸ்பெயின் – 25,428
இத்தாலி – 29,079
இங்கிலாந்து – 28,734
பிரான்ஸ் – 24,895
ஜெர்மனி – 6,866
துருக்கி – 3,397
பிரேசில் – 7,051
ஈரான் – 6,277
சீனா – 4,633
கனடா – 3,767
பெல்ஜியம் – 7,924
நெதர்லாந்து – 5,082
சுவிட்சர்லாந்து – 1,779
ஈக்வடார் – 1,564
மெக்சிகோ – 2,154
ஸ்வீடன் – 2,769

Share.
Leave A Reply

Exit mobile version