பிரித்தனியாவில் உள்ள லூசிஹாம் சிவன் கோவில் தெற்கு பக்கமாக உள்ள மண்டபத்தில் இளைஞர் ஒருவர் துாக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
குறித்த கோயிலில் உதவியாளராக வேலை செய்யும் 32 ற்க்கு உட்பட்ட இளைய அர்ச்சகர் நேற்று அதிகாலை 4 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நற் குணங்கள் கொண்ட இளைஞன் தற்கொலை செய்து கொண்ட காரணம் காதல் விவகாரம் எனக் கூறப்படுகிறது ஆனால் அதனை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இதேவேளை லூசிஹாம் பொலிசாரின் தகவல்படி, தாங்கள் உடலை எடுத்து பகுப்பாய்வுக்காக அனுப்பியுள்ளதாகவும்.உயரமான ஒரு இடத்தில் அவர் தூக்குப் போட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன்,பல கோணங்களில் விசாரணை இடம் பெறுவதாக கூறப்படுகிறது.
