அமெரிக்காவைச் சேர்ந்த சகோதரிகள் மூவர், ஒரே நாளில் ஒரே வைத்தியசாலை குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.

டனீஷா ஹைன்ஸ், ஏரியல் வில்லியம்ஸ் மற்றும் எஷ்லெய் ஹைனெஸ் ஆகிய சகோதரிகளே கடந்த 3 ஆம்திகதி ஒஹையோ மாநிலத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் நான்கரை மணித்தியால இடைவெளியே தலா ஒவ்வொரு குழந்தையை பிரசவித்துள்ளனர்.

5 கோடியில் ஒரு சம்பவமே இவ்வாறு நடக்கும் என 1998 ஆம் ஆண்டு பதிவான இதேபோன்ற சம்பவமொன்று இடம்பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது ஒரு ஆசிர்வாதமாகும் என டனீஷா ஹைன்ஸ் கூறியுள்ளார்.

 

வைத்தியர் எட்ரோய் மெக்மில்லன் என்பவர் இந்த மூன்று பிரசவங்களையும் மேற்கொண்டுள்ளார். முதலில் ஏரியல் வில்லியஸ் பெண் குழந்iயொன்றை பிரசவித்தார். அவருக்கு சின்ஸர் என பெயரிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, எஸ்லேய் ஆண்குழந்தையொன்றை பெற்றெடுத்தார் அவருக்கு எட்ரியன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இறுதியான டனீஷா ஹைனெஸ் எம்ரி என்ற தனது மகளை பிரசவித்தார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version