இடியன் துவக்கால் தனக்குத்தானே வெடி வைத்து தற்கொலை செய்துள்ள சம்பவமொன்று மாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மாங்குளம் துணுக்காய் வீதியை சேர்ந்த ரகுநாதன் கௌரிதரன் வயது 37 என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்.

குறித்த இளைஞர் கால் முறிந்து முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியவர் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும்  இடியன் எனப்படும் ஒருவகை கட்டு துப்பாக்கியினால் தனக்குத்தானே வெடி வைத்து மரணித்துள்ளார்.

மரணம் தொடர்பிலான முதற்கட்ட விசாரணையில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டில் விரக்தியுற்ற குறித்த நபர்  தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version