கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டவர்களில் கவின், லாஸ்லியா, சாண்டி, தர்ஷன், முகேன் போன்றோர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

அந்த வகையில் அவர்களுக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. அதில் நடிகையாக தமிழ் சினிமாவில் சாதனை படைப்பார் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை லாஸ்லியா.

இலங்கையில் நியூஸ் ரீடர் ஆக இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தினார். அதன் விளைவு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

அந்த வகையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நாயகியாகும், நடிகர் ஆரி நடிக்கும் புதிய படமொன்றில் நாயகியாகவும் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு படங்களுக்கும் அவருக்கு சுமார் 30 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளது. அறிமுக படங்களிலேயே இந்த அளவு மிகப் பெரிய சம்பளம் கொடுப்பது இதுதான் முதல்முறை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

வருங்காலத்தில் லாஸ்லியா தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். இருந்தாலும் இன்னமும் அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்த்துக் கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version