கிளிநொச்சி ஏ-09 வீதியின் ஆனையிறவு பகுதியில் 28 ஆம் திகதி இரவு 7 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கரவண்டியும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.