தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வைத்தியசாலை அறை ஒன்றில் தாதி ஒருவரும் அவரது கள்ளக் காதலனும் தனிமையில் உல்லாசம் அனுபவித்ததனை அவதானித்த பிரதேச இளைஞர்கள் அவர்கள் இருவரையும் குறித்த அறையில் விடிய, விடிய பூட்டிவைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குமரி மலையோர பகுதியில் ஒரு அரசாங்க ஆஸ்பத்திரியிலேயே  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

35 வயதான தாதியும் அவரது கள்ளக் காதலன் என நம்பப்படும் நபரும் ஆஸ்பத்திரி அறை ஒன்றில் ஜாலியாக இருந்துள்ளனர்.

இதனை அவதானித்த அந்த பகுதி இளைஞர்கள் அவர்கள் இருவரையும் உள்ளே வைத்து பூட்டி விடிய, விடிய அவர்களை சிறைப்பிடித்த வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஆஸ்பத்திரிக்குள் கள்ளக் காதல் ஜோடி என்றத விடயம் தெரிய வந்ததும் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் அங்கு வந்து ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் ரூம் கதவை திறக்குமாறு கோஷமிட்டனர்.

இதனையடுத்து ஊழியர்கள் கதவை திறந்து பார்த்தபோது அந்த ஜோடிகள் காணப்படாதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், அறையிலிருந்த குளியலறையைப் பாருங்கள் என்று கூச்சலிட்டனர்.

இதன்படியே குளியறைக்குள் (பாத்ரூம்) சென்று பார்த்தபோது, இருவரும் அங்கே மறைந்திருந்தனர்.

அப்போது அந்தத் தாதி ‘இது என் புருஷன்’ என்று கூறி சமாளிக்க பார்த்தார்.

ஆனாலும், பொதுமக்கள் விடவில்லை. பொலிஸுக்குச் சொல்வோம் மிரட்டவும் கள்ளக்காதல் ஜோடி நடுநடுங்கிவிட்டது. இதனையடுத்து இந்த விடயம் பஞ்சாயத்துக்குச் சென்றது.

இந்த நிலையில் குறித்த நபர் தனது கள்ளக்காதல் என்று கண்ணீருடன் தாதி ஒப்புக் கொண்டு, தவறுக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

இனிமேல் இப்படியெல்லாம் செய்ய மாட்டோம் என்று 2 பேருமே கெஞ்சினர். இதனையடுத்து அவர்களை பொதுமக்கள் மன்னித்து விடுவித்தனர்.

நன்றி:- Tamil.oneindia.

Share.
Leave A Reply

Exit mobile version