முகத்தில் பரு, தேமல், கண்களில் கருவளையம் போன்றவற்றை நீக்கி பொலிவுடன் தோற்றம் பெறவேண்டுமென எண்ணுவது அனைவரினதும் விருப்பமாகும்.

இந்தியா, திருவண்ணாமலை மாவட்டத்தில் குமரேசன் என்ற பாம்பாட்டியொருவர்,  அங்குள்ள கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடத்தே, ‘முகத்தில் இருக்கும் கருவளையத்தை நீக்க வேண்டுமா? தன்னிடம் உள்ள விஷப்பாம்பை வைத்து முகத்தில் தேய்த்தால் போதும். அவை இருந்த இடம் இல்லாமல் போய் விடும்’ என்று ஆசை வார்த்தை கூறி இந்த நூதன சிகிச்சை பெற அழைத்துள்ளார்.

 

இதை நம்பி பலரும் இந்த சிகிச்சை பெற முன்வந்தனர். அந்த பாம்பாட்டி 100 ரூபாயை வாங்கிக் கொண்டு அதிக விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்பை கையில் சுற்றி கருவளையத்தை நீக்குவதாக அவர்களது முகத்தில் தடவி வந்துள்ளார்.

இந்நிலையில், பலரும் பயந்து நடுங்கியபடியே இந்த சிகிச்சைக்கு  ஒத்துக்கொண்டு இணங்கியுள்ளனர்.

இளைஞர்கள் பலர் பயந்து ஓடியதையும் காண முடிந்தது. அபாயகரமான இந்த பாம்பு சிகிச்சையுடன், மஞ்சள் கரு கலந்த மருந்தையும் கொடுத்து அதை முகத்தில் தேய்த்து வருமாறு பொதுமக்களுக்கு அந்த பாம்பாட்டி அழகுக் குறிப்புகளையும் கூறிவருகிறார்.

உலகம் நவீன மயமடைந்து வருகின்ற இக்காலத்திலும், இது போன்ற விடயங்களை மக்கள் நம்பி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version