காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் கரையொதிங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மற்றையவர் தொடர்பாக தகவல் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் ஒரு மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு பேர் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தையிட்டியைச் சேர்ந்த சிவச்சந்திரன் நிரோஜன் (வயது -19), மாசிலாமணி தவச்செல்வம் (வயது -19) என்ற இருவருமே கடலலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களில் சிவச்சந்திரன் நிரோஜன் என்பவரே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version