கஜகஸ்தானைச் சேர்ந்த யூரி டோலோச்ச்கோ (Yuri Tolochko) என்ற நபர் (Body Builder) மார்கோ (Margo) என்ற பொம்மையை 8 மாதங்களாகக் காதலித்து திருமணம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வரலாற்றில் இதுபோன்றதொரு வித்தியாசமான காதலை எங்கும் நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இதைப் பற்றி பலவிதமான கற்பனைகளுடன் இணையதளத்தில் பலரும் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
