யாழ்போதனா வைத்தியசாலையின் விடுதிக்கட்டிடங்கள் சில நீரில் மூழ்கியுள்ளன.
யாழ்போதனா வைத்தியாசலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.

யாழ் நகரில் சரியான வடிகால் அமைப்பு வசதியின்மையால் போதனா வைத்தியசாலையின் சில விடுதிக் கட்டடங்களின் பகுதிகள் நீரில் மூழ்கின.

சில வைத்திய சேவைகள் தற்காலிகமாக இடங்களுக்கு மாற்றப்பட்டு சிரமத்தின் மத்தியில் வழங்கப்படுகின்றன.

இருப்பினும் வைத்தியசாலையின் பல பகுதிகள் சாதாரணமாக இயங்குகின்றன.

சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எதிர்வரும் காலங்களில் எடுத்து இவ்வாறான அனர்த்தம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version