கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த இருபது வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரத்திற்கு முன் எரிபொருள் விற்பனை நிலையத்தில் பணியாற்றிய முதியவர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதனை தொடர்ந்து அவரோடு தொடர்பிலிருந்த அருகில் உள்ள குடிநீர் விநியோக நிலையம், மற்றும் மலச்சாலை ஆகியவற்றிலிருந்தவர்களும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோததனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது குடிநீர் விநியோக நிலையத்திலிருந்த மூவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இவர்களோடு தொடர்பிலிருந்த பலருக்கு பி.சி.ஆர் பரிசேதனை முதலாவது பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்படாத நிலையில் முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு 11 வது நாள் பெறப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போதே மலர்சாலை இளைஞனுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்களது மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

