கொரோனா வைரசிற்கான மருந்தினை தயாரித்துள்ளதாக தெரிவித்து வரும் கேகாலை வைத்தியர் தம்மிக்க பண்டார பௌத்தமதகுருவர் முன்னிலையில் நான் காளி என ஆவேசப்பட்டுள்ளார்.

அனுராதாபரத்தில் உள்ள அட்டமஸ்தானயவின் தலைமை மதகுரு முன்னிலையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்

கேகாலை வைத்தியர் இன்;று அனுராதபுர ஜய ஸ்ரீமாகபோதிக்கு செல்ல முயன்றுள்ளார்.

அவருக்கு அதற்கான அனுமதி மறுக்கப்பட்டவேளை அவர் தான் அங்குள்ள ஸ்ரீமாகபோதிக்கு தனது மருந்தினை வழங்கி வழிபாடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது அந்த பகுதியில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

அவ்வேளை கேகாலை மருத்துவர் தலைமை மதகுருவிடம் நான் காளி நான் உங்கள் தாய் என தெரிவித்துள்ளார்.

உலகை பாதுகாக்கவே மருந்தினை உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version