திருகோணமலை கிவுளக்கட குளத்துக்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் இளைஞரொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று (28) இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர் காதல் விவகாரத்தினால் விரக்தி அடைந்த நிலையில் தூக்கில் தொங்கியதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அனுராதபுரம் – குகுலாகுளம பகுதியைச் சேர்ந்த இஷாரா நவிது (26வயது) என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அந்நபர் யுவதி ஒருவரை காதலித்து வந்த நிலையில் வீட்டாருக்கு விருப்பம் இல்லாத நிலையில் இருவருக்கிடையில் தகராறு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த இளைஞர் மன உளைச்சல் காரணமாக தூக்கில் தொங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version