மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில், கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் காணாமல் போன 15 வயது சிறுமியை மீட்டதுடன், அந்த சிறுமியை அழைத்துச் சென்ற வவுனியாவைச் சேர்ந்த, 42 வயதுடைய ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (03) கொக்கட்டிச்சோலையில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் இருந்த நிலையில் கடந்த ஏப்பில் 15ம் திகதி காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து, பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இந்தநிலையில், குறித்த சிறுமி 42 வயதுடைய வவுனியாவைச் சோர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக வீட்டை விட்டு சிறுமி வெளியேறி குறித்த நபருடன் புத்தளத்திற்கு சென்று ஒளிந்திருந்துள்ளார்.

இதனையடுத்து, சிறுமியுடன் தொலைபேசியில் உறவினர்கள் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வருமாறு அழைத்த நிலையில், தலைமறைவாகியிருந்த இருவரும் கொக்கட்டிச்சோலைக்கு சம்பவதினமான நேற்று அதிகாலை வந்த நிலையில், பொலிசார் குறித்த சிறுமியை மீட்டதுடன் அவரை அழைத்துச் சென்ற ஒருவரை கைது செய்துள்ளதுடன்இ சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version