சட்ட விரோத பணப்பறிமாற்றம் இடம்பெற்ற 4 இடங்கள் விசேட அதிரடிப்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு , ஒரு கோடியே 86 இலட்சத்திற்கு அதிக பணமும் , 4 இலட்த்திற்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் போது கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் சேர்ந்த 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினரின் கோனஹேண முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே இந்த சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெள்ளவத்தை, கொழும்பு-15, புதுக்கடை மற்றும் கொழும்பு-10 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

குறித்த சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பில் ஒரு கோடியே 86 இலட்சத்து 95 ஆயிரம் ரூபா இலங்கை பணம், 4 இலட்சத்து 32 ஆயிரத்து 502 ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த வெளிநாட்டு பணத்தில் 10 ரூபாய் இந்திய பணத்தாள்கள் 16, 20 ரூபா 6, ஒரு குவைத் தினார் தாள்கள் 7, 100 கட்டார் தினார் ஒன்றும், 50 சிங்கப்பூர் டொலர் தாள் ஒன்றும், 100 அமெரிக்க டொலர் தாள்கள் 9, 200 யூரோ ஒன்றும் உள்ளடங்குகின்றன.

இவை தவிர 4 கையடக்கத்தொலைபேசிகளும், இரு கொடுக்கல் வாங்கல் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version