யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் பெட்றோல் குண்டு வீசியுள்ளதுடன் வன்முறையில் ஈடுபட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிளில் நேற்றிரவு வந்த ஆறு பேர் கொண்ட குழுவே இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டுள்ளது.

பெட்றோல் குண்டை வீசியது மட்டுமன்றி, வீட்டில் இருந்து சொத்துக்களுக்கும் தீ வைத்துள்ளனர்.

வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தினால், 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்து சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தினை மேற்கொண்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த சுன்னாகம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version