பெண் ஒருவரின் காதுக்குள் புகுந்துள்ள பாம்பை மருத்துவர் அகற்ற முயலும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், ஒரு பெண்ணின் காதுக்குள் பாம்பு புகுந்து, தலை மட்டும் வெளியே தெரிகிறது என்றால் நம்ப முடிகிறதா?

சமூக வலைதளங்களில் பரவியுள்ள ஒரு வீடியோவில், பெண் ஒருவரின் காதில் பாம்பு நுழைந்து தெரிவது போன்றும், அதனை ஒருவர் எடுக்க முயல்வதும் இடம் பெற்றுள்ளது.

ஆனால் ஆந்த வீடியோவில், பாம்பை வெளியே எடுத்தார்களா? எங்கே நடந்த‌து என்பது போன்ற எந்த விவரமும் இடம்பெறவில்லை.

அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவில், இது போன்று நடக்க சாத்தியமில்லை என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version