தினமும் வேலைக்குச் செல்லும் மக்கள் வீடு திரும்­பு­வ­தற்கு பொது­வாக, பஸ்கள், கார்கள், துவிச்­சக்­கர வண்­டிகள், ரயில்கள், மோட்டார் சைக்கள் போன்­ற­வற்றில் பயணம் செய்வர். அல்­லது நடந்து செல்வர்.

ஆனால், சுவிட்­ஸர்­லாந்தின் பாசெல் நக­ரி­லுள்ள மக்கள் பலர் ஆற்றை நீந்திக் கடந்து வீடு திரும்­பு­கின்­றனர்.

மருந்து நிறு­வ­னங்கள், கலைக்­கூ­டங்கள் போன்­ற­வற்­றுக்கு பிர­சித்­த­மான நகரம் இது. அங்­குள்ள மக்­க­ளுக்கு நீந்­து­வதும் மிகவும் பிடித்­த­மான விடயம்.

வேலை முடி­வ­டைந்து வீடு திரும்பும் வழியில், அந்­ந­க­ருக்கு ஊடாக செல்லும் ரைன் நதியில் நீந்தி செல்­வ­தற்கு பலர் ஆர்வம் காட்­டு­கின்­றனர்.

இவர்கள் தமது ஆடைகள், செல்போன் மற்றும் பொருட்­களை மீன் வடி­வி­லான பை ஒன்­றுக்குள் வைத்­துக்­கொண்டு அப்­பை­யுடன் நீந்­து­கின்­றனர்.

இப்பை ‘விக்­கெல்பிஷ்’ என அழைக்­கப்­ப­டு­கி­றது. நீந்­து­வ­தற்கு உதவும் ஒரு உப­க­ர­ண­மா­கவும் இது பயன்­ப­டு­வ­தாக தெரி­விக்­கி­றப்­ப­டு­கி­றது.

இவ்­வாறு நீந்திச் செல்­ப­வர்கள் ஆற்­றி­லிருந்து வெளி­யே­றி­ய­வுடன் ஆடை மாற்றிக் கொள்­வ­தற்­காக ரைன் நதி­யோ­ரங்­களில் சிறு அறை­களும் அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக பயண எழுத்­தாளர் அலெக்ஸா தெரி­வித்­துள்ளார். சில இடங்களில குளியல் மற்றும் கழிவறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என அவர் கூறுகிறார்.

Share.
Leave A Reply

Exit mobile version