கம்பளை லொக்குஅங்க வெலம்பொட பிரதேசத்தில் புதன்கிழமை (06) கணவரால் விறகு கட்டையால் தாக்கப்பட்டு மனைவி உயிரிழந்துள்ளார்.

நீண்ட கால குடும்ப தகராறு காரணமாக 28வயதுடைய கணவன் தனது 24வயதுடைய இளம் மனைவியை விறகு கட்டையால் தலையில் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ள பெண் 1. 1/2 வயது பெண் குழந்தையின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த பெண்ணின் கணவரை வெலம்பொட பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version