1987 ல் இந்திய அமைதிப்படையுடனான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் வெடித்த பொழுது பிரேமதாசாவின் ஒத்தாசையோடு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தலைநகரில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரோடு சேர்ந்து தமது செலவீனங்களுக்காக ஆட்களைக் கடத்திப் பணம் பறிக்கும் வழக்கமிருந்தது.
கருணா புலி இயக்கத்திலிருந்து பிரிந்தபின் இந்தப் பணப்பறிப்பு வேலைகளையும் கடத்தல்களையும் கொலைகளையும் கருணா, பிள்ளையான் குழுவினர் தத்தெடுத்துக் கொண்டனர்.
இன்று வரை இதுவே நடைமுறையும் யதார்த்தமும்.
ஜனநாயகப் பாதையில் நம்பிக்கை கொண்டிருந்த நான் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத போதும் இதற்காக அவ்வமைப்பிலிருந்து வெளியேறினால் எனக்கும் எனது குடும்பத்துக்கும் உயிராபத்து ஏற்படும் என்ற அச்சத்தினால் தொடர்ந்து இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
ரி.எம்.வி.பி செய்த எண்ணற்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் .
3.திருகோணமலை தமிழர் புனர்வாழ்வு அமைப்பாளர் விக்கினேஸ்வரன் படுகொலை.
4.தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை.
5. கொழும்பு வர்த்தகர் பாலா கடத்தப்பட்டுப் படுகொலை
6. கிழக்குப் பலகலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் கொலை. இவர் பொட்டுஅம்மானுக்கு வேலை செய்கிறார் என்ற சந்தேகத்தின்பேரில் கொல்லப் பட்டார்.
7.மட்டக்களப்பு மாவட்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்க செயற்பாட்டாளர் இருவர் கடத்தப்பட்டுப் படுகொலை.
8.ஊடகவியலாளர் லசந்தா விக்கிரமத்துங்கா கொலை.
9. பிரகீத் எக்னெலிகொட கொலை. 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது இவர் பிள்ளையான் குழுவால் கொலைசெய்யப் பட்டார்.
மற்றும் 150 பேருக்கு மேலனவர்கள் பிள்ளையான் குழுவால் கடத்தப் பட்டுப் படுகொலை செய்யப் பட்டனர்.
இந்தக் கொலைகள் அனைத்தும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் குறிவைக்கப்பட்டு, இராணுவ உளவுப்படையால் புறச் சூழல்கள் ஏற்படுத்தப் பட்டு ரி.எம்வி.பி யினால் படுகொலை செய்யப் பட்டனர்.
ரி.எம்.வி.பி யின் இந்தக் கொலையாளிகளை இராணுவப் புலனாய்வுத்துறை கடவுச் சீட்டு எடுத்துக் கொடுத்து பணமும் கொடுத்து வெளிநாடுகளுக்கு அகதிகளாக அனுப்பி வைப்பர்.
பெரும்பாலானோர் பரிஸ்நகரத்துக்கும் சிலர் மத்திய கிழக்குக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். பரிஸ்சில் இலங்கைத்தூதரகமும் பிள்ளையானின் அரசியல் ஆலோசகருமான ஞானம்(ஸ்டாலின்) என்பவரும் அகதியாவதற்கு வழி செய்துகொடுத்துப் பராமரித்து வருகின்றனர்.
அவர்கள் இப்பொழுதும் பரிசில் வாழ்கின்றனர். பரிசில் ரி.எம்வி.பிக்கு ஒரு பெரிய கிளையும் இலங்கைத் தூதரகத்தோடு இணைந்து வேலை செய்யும் குண்டர் படையும் உண்டு.
இவர்கள் ஞானம்வீட்டில் அடிக்கடி கூடுவர். இலங்கைத் தூதரகம் வேண்டிய பண உதவிகளைச் செய்யும்.
பிரான்சில் உள்ள ரி.எம்வி.பி கொலைப்படை சிறிதரன், தவேந்திரராசா, சதீஸ், மாறன், அசோக் மற்றும்பலர்.
கருணாவின் மனைவி லண்டனில் வாழ்பவர். கருணாவுக்கு இராணுவப் புலனாய்வுத்துறை ஒரு சிங்களவரின் பேரில் இராஜதந்திரக் கடவுச் சீட்டு எடுத்துக் கொடுத்து பண்டாராநாயக்கா விமான நிலையத்துக்கூடாக லண்டனுக்கு அனுப்பி வைத்தனர்.
கருணா லண்டன்போய் இறங்கி 5 நாட்களுக்குப் பிறகு போலிக் கடவுச் சீட்டு விவகாரத்தை கிருஷ்ணன் என்பவர் மூலம் லண்டன் உளவுத்துறை இலாகவுக்கு சொல்லிக் கைது செய்யப் பண்ணினார்கள்.
இந்தக் கிருஷ்ணன் பலநாட்டுக் கடவுச்சீட்டுகளைவைத்து முன்நாள் சாவகச்சேரிப் பாராளமன்ற உறுப்பினர் நவரத்தினத்தோடு சேர்ந்து உலக உளவு நிறுவனங்களுக்கு வேலை செய்பவர்.
கிழக்குப் புலிகளைப் பிளப்பதில் முக்கிய பங்கு வகுத்தவர்.
ஆரிந்தக் கிருஷ்ணன். இவர் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கட்டுபத்தையில் புளொட் உமாமகேஸ்வரன் சேவையராகக் கல்வி கற்கும்பொழுது இவரும் அவரோடு சேர்ந்து சேவையர் கல்வி கற்றவர். உமாமகேஸ்வரன் அப்பொழுது தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்புக் கிளைச் செயலாளர்.
கிருஷ்ணன் சாவகச்சேரிப் பாரளமன்ற அங்கத்தவரோடு சேர்ந்து உலகப் பாராளமன்றக் கூட்டங்களுக்குப் போபவர்.
இந்தக் கிருஷ்ணன் பலநாட்டுக் கடவுச்சீட்டுகளை வைத்து முன்நாள் சாவகச்சேரிப் பாராளமன்ற உறுப்பினர் நவரத்தினத்தோடு சேர்ந்து உலக உளவு நிவுனங்களுக்கு வேலை செய்தவர்.
கியுபாவில் நடந்த இளைஞர் மகாநாட்டுக்கும் கிருஷ்ணன் போனார். இவரிடம் 5 நாடுகளின் வித்தியாசம் வித்தியாசமான கடவுச் சீட்டு உண்டு.
அந்தக் கடவுச் சீட்டகளைப் பலருக்குக் காட்டியிருக்கிறார். கருணா புலி இயக்கத்திலிருந்து பிரிந்த பொழுது கிருஷ்ணன்தான் இணைப்பு வேலைகளைச் செய்தவர்.
கருணா பிள்ளையான் பிரிவினையின்போது கிருஷ்ணன் கருணாவோடும் பிள்ளையானோடும் ஒரே நேரத்தில் தொடர்புகளை வைத்திருந்தவர்.
இவர் கருணாவோடு கதைப்பதற்கென்று ஒரு தனித் தொலைபேசி வைத்திருந்தார். பிள்ளையானோடு கதைப்பதற்கென்று ஒரு தனித்தொலைபேசி வைத்திருந்தார்.
இவருக்கு இலங்கை இராணுவ உளவுப் பிரிவோடும் இந்திய உளவுப்பிரிவான றோவோடும் தொடர்பு உண்டு.
இவரது நண்பனான லண்டனில் உள்ள சொலிசிட்டரான மனோகரன் லண்டன் உளவுப்படைக்காக வேலைசெய்கின்ற டொக்ரர் சந்திரனோடு ஒரு மேடையில் தோன்றி இந்திய உளப்படையினது போலி அபிவிருத்தித் திட்டம் பற்றி பிரசித்தமாக மக்களுக்கு விளக்கினவர்.
கருணா 02.11.2007 அன்று லண்டனில் கைது செய்யப்பட்டார்
9 மாதங்களுக்கும் மேலாக சிறையில் வைக்கப்பட்டார்.
கருணாவை தூக்கி எறிந்துவிட்டு பிள்ளையானை பதவி உயர்வு பெற இராணுவம் விரும்பியது. கருணா லண்டனில் கைது செய்யப்பட்டிருந்த காலத்தில் இலங்கை இராணுவப் புலனாய்வுத்தலைவர் பிறிக்கேடியர் அமல் கருணசேனாவும், சுரேஸ் சலேயும் பிள்ளையானிடம் சென்று இனியபாரதி, திலீபன் ஊடாகக் கருணா பிள்ளையானைக் கொல்ல முயற்சிக்கிறார் என்று கோள்மூட்டி பிள்ளையானைக் கொண்டு கருணாவின் மெய்காப்பாளர் அனைவரையும் கொல்லும்படி சொல்லவே பிள்ளையானும் கருணாவின் மெய்காப்பாளர்களைக் கொன்று தள்ளினார்.
இலங்கை திரும்பிய கருணா பல்லுக் களட்டிய பாம்பு ஆனார். ரி.எம்வி.பி முழுவதும் இப்பொழுது பிள்ளையானின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
கருணாவின் ஆதரவாளர்கள் கழையெடுக்கப் பட்ட பின்னர் ரி.எம்வி.பி யை ஒரு அரசியல் கட்சியாக நயீம் என்ற சட்டத்தரணியுடன் சேர்ந்து பதியும் பொறுப்பு எனக்குத்தரப்பட்டது.(அசாத் மௌலானா)
கோதபாயா பிள்ளையானைத் தலைவராக வரச்சொன்னார். பிள்ளையான் தலைவராக வரவில்லை என்று சொல்லிவிட்டார்.
பிள்ளையானுக்குத் தனது கல்வியறிவு போதாமைபற்றி நன்றாகவே தெரிந்து இருந்தது. அது கோதபாயவுக்குத் தெரிந்திருக்கவில்லை.
இலங்கை உள்நாட்டு யுத்தம் கல்வியறிவு இல்லாதவர்களைப் பாராளமன்றத்துக்கு அனுப்பியது. பிள்ளையானை மகிந்தா ராஜபக்ஸ்ச புழுகும்பொழுது நான் குழந்தை இராணுவமான பிள்ளையானை முதல் மந்திரி ஆக்கினேன் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கூறுபவர்.
நந்தகோபன் குமாரசாமி
இதன் காரணமாகப் பிள்ளையான் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த சிவில் என்ஜினியரான நந்தகோபன் குமாரசாமியைத் தலைவராக்கினார். 23.1.2008 ரி.எம்.வி.பி கட்சி உத்தியேக பூர்வமாகப் பதியப் பட்டது. அதன் சின்னம் படகு.
ரி.எம்.வி.பி யின் முதல் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. முதன் முதலாகப் பசில் ராஜபக்கசவை அங்கு சந்தித்தோம். அவர் அங்கு முதன் முதலாக மட்டக்கிளப்பின் உள்ளூர் ஆட்சித் தேர்தலை நடாத்தப்போவதாக கூறினார். இது கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான முன்னோடியாகும்.
மாநகரசபைத் தேர்தலுக்கு மட்டும் அரசாங்க வெற்றிலைச் சின்னத்திலும் மற்றப் பகுதிகளுக்குப் படகுச் சின்னத்திலும் போட்டியிடச் சொன்னார்.
இந்தத்தேர்தல் மார்ச் 2008; நடந்தது. மற்றத்தேர்தல்களுக்கு படகுச் சின்னத்தில் கேட்கச் சொன்னார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ரி.எம்.வி.பி எல்லாத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
கிழக்கு மாகாண சபைத்தேர்தல் 2008 மேயில் நடந்தது.
பிள்ளையான் அந்தத்தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக வந்தார்.
2007 லிருந்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் மாதாமாதம் ரி.எம.;வி.பி க்கு பணம் ஒதுக்கப் பட்டது. மாதம் ரூபா 3.5 மில்லியன் தரப்பட்டது. இதற்காகப் பிள்ளையான் என்னை(அசாத் மௌலானா) நியமித்ததார்.
நான்தான் ஒவ்வொரு மாதமும் காசை எடுத்துக்கொண்டுவந்து பிள்ளையானிடம் கொடுக்கிறவன் ஆகும். சம்பளம் தாறதற்குப் பொறுப்பாக இருந்தவர் மொகமட். இவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி.
2008 பிள்ளையான் முதல் அமைச்சரான பின்னர் ஆகஸ்ட் மாதமளவில் பசில் ராஜபக்ஸ்ச ஒரு சந்திப்புக்காக அழைத்திருந்தார்.அங்கு நானும் பிள்ளையானும் அவரது அலுவலகம் சென்ற போது ஒரு பெண்மணி அங்கு அமர்ந்திருந்தார். பசில் ராஜபக்ஸ்ச அவரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அவரது பெயர் திருமதி பிரபா மூர்த்தி. அவருடன் தொடர்பைப் பேணும்படி அவரது தொலைபேசி இலக்கத்தைத் தந்தார்.
எமது தொலைபேசி இலக்கத்தையும் அவரிடம் கொடுத்தோம். இவர் இந்திய உளவுப்படையான றோவினால் நியமிக்கப் பட்டவர்.
அரியோம் நமவென்றே இந்திய உளவுப்படை இலங்கை உள்நாட்டு யுத்தத்தைத் தயாரித்து தொடர்ந்து வழிநடாத்திக் கொண்டு வந்தது.
றோவுடனான தொடர்புக்காக ரகுவை பிள்ளையான் நியமித்தார். எனக்கு வேலைப் பழு அதிகரித்ததால் அப்படிச் செய்தேன் என்று அவர் சொன்னார்.
மலேசியாவில் உள்ள ஒரு றோ அதிகாரியை ரகு சந்திக்க வேண்டும் என்று கேட்கப் பட்டது. ரகுவும் ஒருத்தருக்கும் தெரியாமல் போய்ச் சந்தித்து வந்தார். றோ தொடர்ந்து எங்களுக்கு நிதி உதவி செய்தது.
அப்டி இருக்கும் நாளில் ரகு நெவெம்பர் 14, 2008 கொழும்பில்வைத்து சுட்டுக் கொல்லப் பட்டார். பிள்ளையான், அவர் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று குற்றம்சாட்டினார்.
ரகு இலங்கை உளவுப்படைக்குத் தெரியாமல் றோவோடு தொடர்பு வைத்ததற்காகவே கொல்லப்பட்டார்.
பிள்ளையான் சொன்னார் இது இராணுவம்தான் செய்தது என்று.
இருந்த போதும் பிள்ளையானால் இலங்கை இராணுவத்தோடு உறவை முறிக்க முடியாது.
இலங்கை இராணுவமும் பிள்ளையானோடு உறவை முறிக்காது. இரண்டுமே அனுகூல சத்துருக்கள். இனம்தெரியாத கூட்டுக் கொலைகளில் இருதரப்புமே ஒன்றை மற்றொன்று பரஸ்பரம் தங்கி நிற்பவை. இலங்கை அரசாட்சியென்பது இராணுவ இரகசியப் படையின் ஆட்சிதான்.
றோவுக்குள்ளே இலங்கை இராணுவம் உளவு பார்ப்பதும் இலங்கை இராணுவத்துள் றோ உளவு பார்ப்பதுமாக இருந்தபோதும் றோவும் இலங்கை இராணுவமும் எப்பொழுதும் ஏதோ ஒரு விதத்தில் இணைந்து வேலை செய்தனர்.ரகுவைக் கொன்றதன் பின் பிள்ளையான் இலங்கை இராணுவத்தில் கோபம் கொண்டிருந்தார். அதில் இராணுவத்துக்கும் பிள்ளையானுக்கும் இடையில் ஒரு முரண்பாடு வந்திருந்தது.
மாகாண சபைத்தேர்தல் முடிந்தவுடன் மாகாணசபை அங்கத்தவர்கள் அனைவரையும் கேரள உள்ளூர் அரசாங்க நிறுவனம் பயிற்சிக்காக அழைத்தனர்.
இது றோவின் ஏற்பாடு. என்னையும் பிள்ளையானையும் இரண்டு நாட்கள் முன்னுக்கும,; மற்றவர்கள் இரண்டு நாட்கள் பின்னுக்கும் வரக்கூடிய வாறு அந்த அழைப்பு இருந்தது.
பயிற்சி முடிந்தவுடன் எம்மைக் கொச்சியில் தங்கும்படி கேட்டிருந்தனர். நாம் கொச்சியிலிருந்து புதுடெல்கிக்குப் போய் தாச் எம்பாசிடர் ஹொட்டலில் றூம் போட்டுத் தங்க விடப்பட்டோம்.
அங்கே நாம் றோவின் தலைவரைச் சந்தத்தோம்;.(10 யூன் 2010) அவரது பெயர் றாவ்). தாம் ரி.எம்.வி.பி க்கு உதவி செய்வதாகவும் தாங்கள் உதவி செய்வது இலங்கை அரசாங்கத்துக்குத் தெரிந்தால் பிழையாக விளங்குவார்கள் என்றும் எமக்குச் சொல்லப்பட்டது.
ரி.எம்.வி.பி க்கு உதவி செய்வதற்காக இந்தியத் ஸ்தானிகர் ஆலயத்தில் இளங்கோ என்ற கொமிசனர் ஒருவரை அமர்த்துவதாகவும் கூறினார்கள்.
எங்களிடம் ஒரு தபால் உறை வழங்கப் பட்டது. அதனுள் அமெரிக்க டொலர் 25000 அளவில் இருந்தது.
இளங்கோ நிறைய உதவி செய்வார். கிழக்குக் கரையோரங்களில் சீனாவும் பாகிஸ்தானும் செல்வாக்குப் பெறாமல் பார்ப்பது தவிர தமக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்று கூறினார்.
நாங்கள் எங்களுக்கு நிதி உதவி செய்யும்படியும், வேலைவாய்புகள் ஏற்படுவதற்கு வழி செய்யும்படியும் விதவைகளைப் பராமரித்துத் தரும் படியும் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி ஏதும் சொய்து தரும்படியும் கேட்டோம்.
இலங்கைக்கு வந்தபின,; முதல் அமைச்சர் பிள்ளையானையும் எங்களையும் வரச் சொல்லிக் கோதபாய கூப்பிட்டார்.
சர்வதேச சமூகங்கள் ரி.எம்.வி.பி யிடமிருந்து ஆயுதங்களைக் கழையும்படி நெருக்குவாரம் செய்கின்றன. அதனால் ஆயுதங்களைக் கழையும்படியும் கேட்டுக் கொண்டார்.
சர்வதேசத்துக்குக் காட்டுவதற்குச் சில ஆயுதங்களை ஒப்படைக்கும் படியும் ஏனையவற்றை மறைத்து வைத்திருக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.
2009 மார்ச் 3 என்(அசாத் மௌலானா) தலைமையில் மட்டக்கிளப்பு பெஃபு மைதானத்தில் பிரிகேடியர் பெர்ணாண்டோ மற்றும் டி.ஜ.ஜி எடிஷன் குணதிலக்காவிடம் ஆயுதங்கள் கையளிக்கப்பட்டன.
நான் முன்னணியில் நின்று இதைச் செய்தேன். அதனோடு சேர்ந்து ரி.எம்.வி.பி யின் இராணுவக் குழு கலைக்கப்பட்டு விட்டதையும் அறைகூவினோம்.
2010 ஜனாதிபதி தேர்தல் வந்தது. அதன்பிறகு பொதுத்தேர்தல் வந்தது. பொதுத்தேர்தலுக்கு ரி.எம்.வி.பிக்கு றோ ரூபா 5 மில்லியன் தேர்தற் செலவுக்காகத் தந்தது. வேறு பல சந்தர்ப்பங்களிலும் நிறையக் காசு கிரமமாகத் தந்தது. றோ வோடு உறவைப் பேணும்பணி என்னிடமே விடப் பட்டது.
எமது முதல் வெளிநாட்டுப் பயணம் ஜப்பானுக்கு. அது 20.9.2008.
இதற்கிடையில் 3 தடவைகள் ஐரோப்பாவுக்கு வந்தோம்.
பிள்ளையானும் நானும் ஜப்பானுக்குப் போனோம்.
எமது முதலாவது பயணம் 27 மே 2009 பின்லாந்துக்குப் போனோம். நாம் சிங்கப்பூருக்குப் போய் அங்கேயே பின்லாந்து விசா எடுத்தோம். ஹெல்சிங்கியில் 2 நாள் தங்கினோம்.
ஹெல்சிங்கியிலிருந்து இத்தாலிக்கு உள்ளக விமானத்தில் போனோம். துரைநாயகம் தனது காரில் இத்தாலியிலிருந்து எங்களை சுவிஸ்சுக்குக் கூட்டி வந்தார்.
பேர்ண் நகரத்தில் பிள்ளையானின் காதலி ஜாஸ்மின் எலிசபெத் உலகசேகரத்தை சைவக் கோயிலில் கல்லாணம் செய்யப்பட்டது.
சுவிற்சலாந்தில் 5 நாட்கள் தங்கினோம்.
பின்பு பரிஸ் சென்று ஞானம் வீட்டில் தங்கினோம். பரிசில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் இராணுவ அதிகாரியை ஞானத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டார.;
அவர் லெப்டினன் கேர்ணல் முகமட். அவர் ஞானத்திடம் பிரான்சில் இருக்கிற அரசாங்கத்துக்கு எதிராக வேலை செய்யிற புலிகளின் பெயர் விபரங்களை எடுத்துத் தன்னிடம் தரச்சொன்னார்
அந்த இராணுவ அதிகாரி. பிரான்சில் சட்டவிரோத ஆபிரிக்கர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் சில 100 யூறோக்களைக் கொடுத்தால் எதையும் செய்வார்கள். காரால் அடிப்பார்கள். கத்தியால் குத்துவார்கள். ஆயுதங்கள் கொடுத்தால் சுடுவார்கள்.
16.11.2009 சூரிச் வந்து பிரான்சுக்குப் போனோம். 4 நாட்கள் ஞானம்விட்டில். தங்கி அரசியல் கூட்டங்கள் நடாத்தினோம்.
3வது ஐரோப்பா பயணம்.10.12.2010 டென்மார்க்குக்குப் போனோம். விசா கொழும்பில் எடுத்தோம்.
டென்மார்க்கில் மக்களைச் சந்தித்து விட்டு சுவிஸ்சுக்கு வந்து பின்பு பிரான்சுக்குப் போனோம். பரிசில் இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த லெப்ரினன் கேர்னல் முகமட்டையும், (யுவான் றம்சான்) அவருது உத்தியோக வாசஸ்தலத்தில் சந்தித்தோம்.
அது ஈகிள் கோபுரத்துக்குப் பக்கத்தில் இருந்தது. முகமட் தான் இலங்கையில் ரி.எம்வி.பி க்கு சம்பளத்துக்குப் பொறுப்பாக இருந்தவர்.
புலிகள் நிறையப் பேர் தப்பிப் பரிசில் வந்துள்ளார்கள் என்று ஞானம் சொன்னார். புலிக்கெதிராக ரி.எம்வி.பி க் காரர்களைப் பயன்படுத்துவது பற்றி ஞானம்வீட்டில் கலந்துரையாடப் பட்டது.
பல ரி.எம்வி.பி கிறிமினல்கள் முகமட் லெப்ரினன் கெர்னல் உட்பட பலர் ஞானம் வீட்டுக்கு வந்திருந்தாங்கள்.
அங்கே இங்குள்ள புலிகளின் குடும்பங்களுக்கு இலங்கையில் நெருக்குவாரம் கொடுக்கபட வேண்டும் என்று கலந்துரையாடப்பட்டது.
சிறிலங்காவிலும் தொல்லை கொடுக்க வேண்டும் என்று முகமட் சொன்னார். அதில் சிறீ, தவேந்திரராசா, மாறன், அசோக், சத்தீஸ், குமரன், சாந்தன,; சரன் என நிறையப்பேர் வந்திருந்தார்கள்.
4ம் ஐரோப்பா பயணம்.
19.1.2012
நேரடியாகப் பிரான்சுக்குப் பயணம். விசா கொழும்பில் எடுக்கப்பட்டது. ஞானத்தின் வீடில்தான் தங்கினோம்.
ரி.எம்.வி.பி யின் பலமான இடம் பரீஸ்தான். ஞானத்துக்கும் காசு, மற்றவர்களக்கும் காசு எல்லாம் இராணுவம்தான் உதவி செய்கிறது. இலங்கை இப்படித்தான் கடன்கார நாடாகியது.
2012 மே மாதம் மாகாண சபை கலைந்தது. அதற்குப் பிறகு வந்த தேர்தலில்; பிள்ளையான் வெற்றி பெற்றபோதும் முதலமைச்சராக வர முடியவில்லை.
அதன் பிறகு முதல் அமைச்சர் நயீப் அப்துல் மஜீத். ஜனாதிபதியின் விஷேட ஆலோசகர் பிள்ளையான். நான் பிள்ளையானது செயலாளாராக நியமிக்கப் பட்டேன்.
2015 ஜனவரி 8 தேர்தலில் மைதிரிபாலா சிறீசேனா ஜனதிபதியானார். வழக்கமாக இராணும் தரும் சம்பளம் தரப்பட்டது.
சுரேஸ் சாலை
3 நாட்களுக்குப் பிறகு சுரேஸ் சாலை எங்களைக் கபறணைக்கு வரச் சொன்னார். சுரேஸ் சாலை ராணுவ உளவுத்துறை இயக்குனர்.
கபறணைக் காட்டிலிருந்து நானும் பிள்ளையானும் சுரேஸ் சாலையின் காரில் ஏறி மூன்று பேரும் கொழும்பை நோக்கிப் பயணம்செய்து கொண்டு போனோம்.
சுரேஸ்சாலை தான் கார் ஓடிக்கொண்டு வந்தார். அவர் சொன்னார் அரசாங்கம் மாறி விட்டது. எந்த நேரமும் என்னவும் நடக்கலாம். ஆயுதங்களை ஒழியுங்கோ. தன்னையும் மாற்றலாம்.
சம்பளம் சிலவேழை தொகையாகக் கொடுக்க விட மாட்டாங்கள். ஆட்களுக்கு நேரடியாகத்தான் கொடுக்க வேண்டி வரும.; எதற்கும் 15 பொய்ப்பேர்களை எழுதித்தாங்கோ. இந்தப்பேர்களை சம்பள லிஸ்டில் சேர்த்து விடுறம்.
அந்தக் காசைப் பிரத்தியேகமாகக் கொடுக்கச் சொல்லுறன். கொழும்பு வந்தவுடன் பின்னால் வந்த எங்கடை வாகனத்தில் மாறி ஏறி மட்டக்கிளப்புக்கு வந்திட்டம். பொய்ப் பேர்களை முகமட்டுக்கு அனுப்பி விட்டோம்.
சீ.ஐ.டி மார்ச் மாதம் பிள்ளையானைக் கூப்பிட்டு 6 மணித்தியாலம் யோசெப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக விசாரணை செய்து வாக்கு மூலம் எடுத்துவிட்டு விட்டிட்டாங்கள்.
2015 பொதுத்தேர்தலில் றணில் வெற்றி. றணில் பிரதம மந்திரியானார். பிள்ளையான் தேர்தலில் தோல்வி.
2015 செப்டம்பர் பிள்ளையானைச் சீ.ஐ.டி கைது செய்தது. பிள்ளையானைக் கைது செய்வதற்கு 2 கிழமைக்கு முன்னர் 2 பேரைக் கைது செய்தார்கள்.
டெல்வின் சில்வா, கிருஷ்ணராசா.( பிரதீப் மாஸ்டர்) முன்னாள் மாகாண சபை உறுப்பினர். ரி.எம்.வி.பி யின் அரசியல் பொறுப்பாக இருந்தவர்.
கயன் மாமா கைது. இவர்களைக் கைது செய்து ஒரு கிழமைக்குப் பிறகுதான் பிள்ளையானைக் கைது செய்தார்கள்.
சீ.ஐ.டி பிள்ளையானின் அம்மா வீட்டை றவுண்டப் பண்ணினாங்கள். அதில் பிள்ளையான் தப்பி விட்டார். பிள்ளையான் என்னைத்தொடர்பு கொண்டு தான் காலிக்கு வாறன் என்னையும் வரச் சொன்னார்.;
நாளைக்குக் காலையில் தொலைபேசியில்; சொல்லிறன். காலையில் வேறு நம்பரில் தொடர்பு கொண்டு மனைவியையும் கூட்டிக்கொண்டு வரச் சொன்னார்.
நான் பிள்ளையானின் மனைவியையும் காரில் ஏற்றிக்கொண்டு காலிக்குப்பேனேன்.
பிள்ளையான் மனைவியிடம் சொன்னார், தான் சி.ஐ.டி யிடம் போகப்போறன்.
அசாத் காசு தரும். இங்கு இருப்பது கஷ்டமென்றால் ஐரோப்பாவுக்குப் போங்கோ என்று சொன்னார். பின்பு என்னிடம் தனது பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு பிள்ளையான் எனது காரில் எறி இருவரும் கொழும்புக்கு வந்து சட்டத்தரணி குசேன் கஸ்சாலியிடம் சென்றோம்.
பிள்ளையான் சட்டத்;தரணியோடு நாலாம்மாடியில் சரணடைந்தார். பிள்ளையானைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள்.
5 மாதம் 4ம் மாடியில்; வைத்திருந்தாங்கள். சிறையிலிருந்த காலத்தில் நான் பிள்ளையானை ஒவ்வொரு சனிக் கிழமையும் அனுமதி பெற்றுச் சந்திப்பேன்.
5 மாதங்களுக்குப் பிறகு மட்டக்கிளப்புச் சிறைக்கு மாற்றினார்கள். அங்கும் சட்டத்தரணி தேவைப்படும்போது பசிலிடம் தொலைபேசித் தொடர்பு கொண்டு கேட்கும்படி சுரேஸ் சாலி கூறினார்.
இதற்கிடையில் சுரேஸ் சாலி மலேசியன் தூதரகத்துக்கு பாதுகாப்புப் பொறுப்பாளராக மாற்றப்பட்டார்.
பசிலிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கேட்டபோது தான் ஒரு சட்டத்தரணியோடு கதைத்துப் போட்டு ஒரு நம்பர் தாறன். அந்தச் சட்டத்தரணியின் பெயர் அணில் சில்வா.
அவர் ஓர் ஜனாதிபதிச் சட்த்தரணி. அவர் இந்த வழக்கைப் பொறுப்பெடுத்தார். அதன் பிறகு நான் அணில் சில்வாவைச் சந்தித்து வழக்கு தொடர்பாகக் கலந்துரையாடினேன்.
பிள்ளையானுக்குக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தார்கள்.
பிள்ளையான் 3 வது எதிரி.
1.பிரதீப் மாஸ்டர்.எட்வின் சில்வா கிருஷ்ணானந்த ராஜா
2.சயன்பாமா-றங்கசாமி (கஜன்மாமா)
3. சிவனேசதுரரை சந்திரகாந்தன்(பிள்ளையான்.)
பிள்ளையானைக் கைது செய்து 6 மாதத்தாலை ஓர் இராணுவ உளவுத்துறையாளியைக் கைது செய்தாங்கள்.
4.வது சந்தேக நபர். கலீல்.
சட்டத்தரணி அணில் சில்வாவிடம் குற்றப் பத்திரிகை கொடுத்த போது தான்பார்த்துவி;ட்டுச் சொல்லுவதாகச் சொன்னார்.
பின்பு பிள்ளையான் வெளியிலை வர வாய்ப்பு இல்லை என்று சொன்னார்.
அவருக்கு எதிராக எல்லா ஆதாரமும் இருக்கு என்று சொன்னார். பசில் கேட்டுக் கொண்டதினால் வழக்கைப் பொறுப்பெடுக்கிறன் என்று சொன்னார்.
ஒரு சட்டக் குழு போடப் பட்டது. அணில் சில்வா
யூ.எல். ஆப்துல் நஜீம்
சிசிஸ் சிறீவர்த்தனா இராணுவ லோயர்.
சுரேஸ் சாலி சொன்னார் வழக்கை வேளைக்கு முடியாதையுங்கோ. நேரம்கேட்டு ஒத்திவையுங்கோ. நாங்கள் சட்டத்தரணியோடு கதைத்து அந்தத் தந்திரோபாயத்தைக் கடைப் பிடித்தோம்.
நான் செயலாளர் என்ற அடிப்படையில் பிள்ளையானை அடிக்கடி பார்க்க அனுமதி பெற்றேன். நான் ஒவ்வொரு வாரமும் பிள்ளையானைப் போய்ப் பார்த்தேன்.
பிள்ளையான் சில அறிவுரைகளை வழங்கினார்
கட்சி பற்றி, நிதி பற்றி, அரசியல் தொடர்புகள் பற்றி, அவரது மனைவிக்கு பணம் கொடுப்பது பற்றி..
பிள்ளையானுக்கு இந்த வழக்கிலிருந்து வெளியில் வருவது கஷ்டம் என்று தெரியும்.
மட்டக்கிழப்புச் சிறைச்சாலையில் அவரது பாதுகாப்புக் கருதி அவருக்குத்தனியான ஒரு பெரிய அறை கொடுத்திருந்தார்கள்.
அந்த அறையில் வேறு யாரையும் தங்க வைக்க வேண்டுமானால் பிள்ளையானது அனுமதியோடுதான் தங்க வைப்பார்கள்.
பிள்ளையான் சிறைக்குள்ளே இருக்கும் போது எவர்க்கும் தெரியாமல் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தினார்.
அந்தத் தொலைபேசி சிறைக்காவலர் ஒருவர் ஊடாக நான்தான் அனுப்பி வைத்தேன். அந்தத் தொலைபேசியில் இரவில் என்னோடு கதைப்பார்.
2017, 2018 காலங்களில் சிறையின் அத்தியட்சகர் அக்பர். அவர் என்னுடன் தனிப்பட்ட முறையில் மிகவும் நல்லவராக இருந்தார்.
2017 ஆகஸ்டில் வழமையாகச் சந்திக்கப் போனபோது என்னட்டைப் பிள்ளையான் சொன்னார்: „காத்தான் குடியிலிருந்து சில முஸ்லீம் பொடியங்கள் சிறைக்கு வந்திருக்கிறாங்கள்.
அவர்கள் வித்தியாசமாக மார்க்கத்தைபற்றிக் கதைக்கிறார்கள். என்னையும் அவர்களைப் போய்ச் சந்திக்கச் சொன்னார்’.
அவர்கள் இப்போது இந்த சிறையில் உள்ளனர். சிறைச்சாலைச் சூப்பரண்டன் அக்பரின் அனுமதியுடன் ஒரு சிறைக்காவலர் அவர்களில் ஒருவரை என்னுடன் பேச அழைத்து வந்தார்.
இது 2017 ஆகஸ்ட் 2 வது கிழமை. அவர் வந்து சலாம் சொன்னார். நானும் சலாம் சொன்னேன். நானும் பிள்ளையானும் அவரும் இருந்தோம்.
அவர் தன்பேர் சைனி மௌலவி என்று சொன்னார்.(குறிப்பு:- இவர் பிற்காலத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக் ஹீறோவாகிய சஹிறான் மௌலவியின் சகோதரர்.). சிறைக்குள் கொண்டு வரப்பட்ட காத்தான்குடி முஸ்லீம் இளைஞர்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு கைதிகள் என்ற பேரில் பிள்ளையானால் எவருக்கும் தெரியாமல் பயிற்றுவிப்பதற்குக் கொணர்ந்திருக்க வேண்டும்.
இந்த உண்மை இதுவரை வெளிக்கொணரப்படவில்லை. இந்த ஒழுங்கை உச்சியிலிருந்த உளவுத்துறையினர் செய்திருக்க வேண்டும்.
சைனி மௌலவி என்னைப் பார்த்து: „நீ ஓர் உண்மையான முஸ்லீம் இல்லை. நீ தாடி வைக்கவில்லை.
லோங்ஸ் கணுக்காலுக்குக் கீழ் இருக்குது. உங்களிடம் எந்த வங்கி கணக்கு உள்ளது.(குறிப்பு.-ஆபிரகாமிய மதத்தில் யூதர்களிடமிருந்து வேறுபட்டு, பணம் பணத்தினூடு சம்பாதிப்பது, அதாவது வட்டிக்கு பணம் கொடுத்துச் சம்பாதிப்பது ஹறாம். இஸ்லாத்தில் வட்டிக்கு பணம் கொடுப்பது பாவம்)
நான் சொன்னேன் சம்பத் வங்கியில் எனக்குக் கணக்கு இருக்கிறது என்று.
வட்டியோடை தொடர்பு வைத்திருக்கிறீர்கள். இன்னும் நீ முஸ்லீம் இல்லை. கடும் அதீத வாதம். அதற்குப் பிறகு அவர் போய்விட்டார்.
பிள்ளையான்:’ இவர்கள் கடும் விஷயமான ஆக்கள். என்னுடைய அறையில்தான் இருக்கிறார்கள்.
நான் இவர்களுக்கு எல்.ரி.ரி.ஈ தற்கொலைத் தாக்குதல் பற்றிப் படிப்பிச்சிருக்கிறன். இவங்கள் வழக்கு முடிந்து வெளியில் வருவாங்கள்.
கஷ்டத்தில் இருக்கிறார்கள.; அவர்களுக்கு உதவி செய்வம். அவர்கள் பின்பு எங்களுக்கு உதவி செய்வார்கள். சைனி மௌலவியின் மனைவியின் தம்பியிடம் ரூபா 50000 கொடு.
நான் வெளியில் வந்ததன் பின், அடுத்தநாள் சைனி மௌலவியின் மச்சான் தொலைபேசி எடுத்தார். நான் எங்கள் காரியாலயம் மட்டக்கிளப்பு லேக் றோட்டில் இருக்கு. அங்கு வரச் சொன்னேன். அங்கு அவர் வந்தார். அவருக்கு ரூபா 50000 கொடுத்தேன்.
பிள்ளையான் சுரேஸ் சாலையோடு 2 முறை தொலைபேசியில் கதைத்து இருக்கிறார். சுரேஸ் சாலை வழக்கு பற்றிக் கேட்டிருக்கிறார்.
பிறகு:
2017 செப்ரம்பர் முதற் கிழமை சுரேஸ் சாலை சொன்னார்.: „ பிள்ளையானைச் சந்திப்பதற்கு ஓர் ஆளை அனுப்பிறன். அவரைக் கூட்டிக்கொண்டு போ. அவரின்பேர் சில்வா.
அவர் ஆரென்று ஒருத்தருக்கும் தெரியக்கூடாது. சிறைப்பொறுப்பாளியோடை கதைச்சுப் போட்டு பிள்ளையானின் நண்பன் என்று சொல்லி அவர் வழக்குக்கு நிதிஉதவி செய்பவர் என்று சொல்லு.
மறு நாள்காலை அந்த ஆள் மட்டக்கிளப்பு ரி.எம்.வி.பி காரியாலயத்துக்கு வந்தார். வண்டியைக் காரியாலயத்தில் நிறுத்தி வைத்துவிட்டு நானும் அவரும் என்னுடைய வாகனத்தில் சிறைச்சாலைக்குப் போனோம்.
சில்வா அட்சர சுத்தியோடு தமிழ் நன்றாகக் கதைத்தார். சிறைச்சாலைக்குள் போவதற்கு என்னுடைய பேரில் பதிந்து கூட்டிக் கொண்டு போனேன். 20 நிமிடம் கதைப்பதற்கு அனுமதி தந்தார்கள்.
இது 2017 செப்ரம்பர் முதற்கிழமை. 20 நிமிடம் கதைக்கப் போனவர் 2 மணித்தியாலங்கள் ஆகியும் கதையை நிறத்தவில்லை.
சிறைக்காவலாளி தனக்குப் பிரச்சனை வரப்போகுதென்று பயப்படத் தொடங்கினார். நாங்கள் இங்கிதம் பாராமல் அறைக்குள் புகுந்ததன் பின் கலந்துரையாடல் நிறுத்தப் பட்டது.
சில்வாவுடன் நான் வெளியே வந்து எங்கள் காரியாலயத்தில் நிறுத்தி வைத்த வாகனத்தில் உடனேயே போய் விட்டார். ஒரு கதையுமே கதைக்க வாய்பபு; இருக்கவில்லை.
அதன் பின் அவரைச் சந்திக்கவில்லை. சில்வாவைத் தங்களின் ஆள் என்று சுரேஸ் சலே சொன்னதிலிருந்து அவர் இராணுவத்தில் கடமைபுரியும் ஒருவராக இருக்க வேண்டும்.
சில்வா வந்து போனாப் பிறகு இவங்கடை ஆட்களைப் பிணை எடுக்க வேண்டும். காசு கொஞ்சம் ஒழுங்கு பண்ணுங்க. ரூபா இரண்டரை லட்சமளவில் வேண்டும்.
சுரேஸ் சலே யட்டைக் கேளுங்கோ என்று பிள்ளையான் சொன்னார். நான் சுரேஸ் சலேயட்டை பிணையெடுப்பதற்கு காசு இரண்டரை லட்சம் தரும்படி கேட்டேன்.
சுரேஸ் சலே தான் முகமட்டிடம் சொல்லி ஒழுங்கு பண்ணுகிறன் என்று சொன்னார். செப்டம்பர் மாதச் சம்பளத்தோடு சேர்த்து இரண்டரை லட்சம் மேலதிமாகத் தரப் பட்டது.
நான் அந்தக் காசை சைனி மௌலவியின் மச்சானிடம் கொடுத்தேன். பின்பு பிணை எடுப்பதற்கு ஓட்டமாவடி சட்டத் தரணி றாசிக்கை ஒழுங்குபடுத்திக் கொடுத்தேன். அவர்கள் 24.10.2017 பிணையில் வெளியில் வந்தார்கள்.
2018 ஜனவரி கடைசியில் இந்தப் பிணையில் வந்தவர்களைச் சுரேஸ் சலே சந்திக்க விரும்புவதாகப் பிள்ளையான் சொன்னார்.
அந்தக் கலந்துரையாடலுக்கு ஒழுங்குபடுத்திக் கொடுங்கோ. அந்தக் கலந்துரையாடலுக்கு என்னையும் போகச் சொன்னார். உங்கடை வாகனத்தில் போகாதையுங்கோ.
இராணுவ வாகனத்தில் உன்னைக் கூட்டிக் கொண்டு போவாங்க. உன்ரை வாகனத்தை நேரே மட்டக்கிளப்புக் போகும்படி அனுப்பிவிடு. ஏனென்றால் உனது வாகன சாரதிக்குத்தெரியக் கூடாதென்று பிள்ளையான் சொன்னார்.
நான் எனது வாகனத்தை மட்டக்கிளப்புக்குப் போகும்படி அனுப்பி விட்டுக் காத்திதிருக்கையில் எனது டெகிவளை வீட்டுக்குப் பக்கத்தில் இராணுவ வாகனம் வந்து நின்றது. நான் சைனி மௌலவிக்குப் முதல்நாளே போன் பண்ணி எனக்கு இப்படி ஒரு மீற்றிங் இருக்கு. நீங்கள் உங்கடை ?