யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் கடற்தொழிலாளர்களின் களஞ்சிய சாலையில், செவ்வாய்க்கிழமை (02) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மலையகம் , உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் (வயது 46) மற்றும் வேலாயுதம் ரவி (வயது 38) ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் , சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.