பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஈராக் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்படி ஆண்குழந்தைகளுக்கு 15 வயதிலும் , பெண் குழந்தைகள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தற்போதுவரை ஈரானில் பெண்களின் திருமணத்துக்கான சட்டப்பூர்வ வயது 18 ஆக உள்ளது.

ஆனால் தற்போது முமொழியப்பட்டுள்ள சட்டமூலத்தின்படி, பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்தில், 9 வயதில் பெண்களை திருமணம் செய்து கொடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

சட்டப்பூர்வ வயது 18 ஆக இருந்தாலும் ஏற்கனவே ஈராக்கில் 28 சதவீத பெண்களுக்கு அந்த வயதை எட்டும் முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது என்று ஐநாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போதய இந்த வயது தளர்வு சட்டமூலத்துக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version