“டெல்லி துவாரகாவில் உள்ள சட்டப்பல்கலைக்கழக விடுதியில், தமிழக மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த அமிர்தவர்ஷினி என்ற மாணவி பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாணவியின் அறையில் இருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை என்று மாணவி எழுதி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.படிப்பு சம்பந்தமாக மாணவி ஒருவித பதற்றத்தில் இருந்ததாக சக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version