வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த வெற்றிமலர் (வயது 57) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

வவுனியா, ஈச்சங்குளம், அம்மிவைத்தான் பகுதியில் உள்ள தனது வீட்டில் நேற்று குறித்த பெண் தனிமையில் இருந்துள்ளார். இதன்போது அங்கு அத்துமீறி வந்த இளைஞர் ஒருவர் அந்தப் பெண் மீது மண்வெட்டியைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த பெண் அம்புலன்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு வருவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்னர்

Share.
Leave A Reply

Exit mobile version