வெள்ளவத்தை – பம்பலப்பிட்டிக்கும் இடையில் 07ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் புகையிரத வாயிலில் தொங்கிய சீன பெண் ஒருவர் தவறி விழுவதை அவரது நண்பரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.
நண்பர் தனது கைப்பேசியில் படம் எடுத்துக்கொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ரயிலில் தொங்கிய நிலையில் மரக்கிளை ஒன்று தலையில் மோதியதில் ரயிலிலிருந்து தூக்கி வீசப்படுவதை அந்த வீடியோ பதிவில் காணக்கூடியதாகவுள்ளது.
தூக்கி வீசி எறியப்பட்ட குறித்த பெண் புதரில் விழுந்ததால் காயம் ஏதும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.