பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) இன்று
அந்நாட்டின் ஊழல் தடுப்பு நிறுவனத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மாத தொடக்கத்தில் அவரைக் கைது செய்வதற்காக புலனாய்வாளர்கள் மேற்கொண்ட முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தென் கொரிய ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்குவதற்கான வழக்கு நேற்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​அவரது பிடியாணையை நீட்டிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.

கடந்த டிசம்பர் மாதத்தில் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியதாகவும், நாட்டில் கிளர்ச்சியைத் தூண்ட முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தென் கொரிய ஜனாதிபதியை கைது செய்வதற்காக அவரது உத்தியோகபூர்வ இல்லத்தின் முன் கூடியிருந்த மக்களால் உருவாக்கப்பட்ட தடைகளை மீறி அவர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version