திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்பிறப்பாக்கியின் செப்புக் கம்பியை திருட முற்பட்ட நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் வியாழக்கிழமை (13) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் உள்ள மக்கெய்சர் விளையாட்டரங்கின் மூலையில் உள்ள மின் பிறப்பாக்கியில் புவித்தொடுப்பு வயரில் இருந்த செப்புக் கம்பியை வெட்டி திருட முயற்சித்தபோதே இவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.

பின்னர் குறித்த நபர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், அண்மைக்காலமாக பின் பிறப்பாக்கியில் உள்ள செப்புக்கம்பி வயர்கள் வெட்டப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version