“அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கடந்த 2-ந்தேதி அவர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வரி விதிப்பு அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 26 சதவீத வரியும், சீனா பொருட்களுக்கு 34 சதவீதம் வரியும் வியட்நாமுக்கு 46 சதவீதமும், வங்க தேசத்துக்கு 37 சதவீதமும், ஜப்பானுக்கு 24 சதவீதமும் விதிக்கப்படும் என கூறினார்.

டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா அமெரிக்க பொருட்களுக்கு கூடுதலாக 34 சதவீதம் வரி விதிக்கும் என அதிரடியாக அறிவித்தது.

இந்த கூடுதல் வரி 10-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என சீனா தெரிவித்துள்ளது.50 சதவீதம் கூடுதல் வரிஇதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சீனா பொருட்களுக்கு கூடுதலாக 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-சினா ஏற்கனவே நிர்ணயித்துள்ள சட்டவிரோத வரிகளுடன் கூடுதலாக 34 சதவீத பழிவாங்கும் வரிகளை விதித்து உள்ளது. இன்று சீனா தனது 34 சதவீத வரி அறிவிப்பை திரும்ப பெறவில்லை என்றால் 9-ந் தேதி முதல் சீனா மீது 50 சதவீதம் கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கும். சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தையும் நிறுத்தப்படும்.

வரி விதிப்பு தொடர்பாக மற்ற நாடுகளுடன் உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று கூறினார்.

சீனாவும், அமெரிக்காவும் இப்படி போட்டி போட்டுக் கொண்டு வரி விதிப்பை அறிவித்து வருவது வர்த்தக போரை மேலும் தீவிரமாக்கி உள்ளது.”,
.

Share.
Leave A Reply

Exit mobile version