“உத்தரப் பிரதேசத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் தனது 2வது கணவனை உதறிவிட்டு 12 ஆம் வகுப்பு படிக்கும் காதலனை மதம்மாறி மூன்றாவதாக திருமணம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) நடந்த ஒரு கோவில் விழாவில், மூன்று குழந்தைகளைக் கொண்ட 30 வயது பெண் ஒருவர் இந்து மதத்திற்கு மாறி 12 ஆம் வகுப்பு மாணவனை மணந்தார் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹசன்பூர் வட்ட அதிகாரி தீப் குமார் பந்த் கூறுகையில், அந்தப் பெண்ணின் பெயர் ஷப்னம். ஏற்கனவே இரண்டு முறை அவர் திருமணம் செய்து கொண்டார்.

ஷப்னம் முதலில் மீரட்டில் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

பின்னர் அவர் சைதன்வாலி கிராமத்தைச் சேர்ந்த தௌஃபிக்கை மணந்தார். தௌஃபிக் சில வருடங்களுக்கு முன் ஒரு சாலை விபத்துக்குப் பிறகு ஊனமுற்றார்.

சமீபத்தில், 12 ஆம் வகுப்பு படிக்கும் 18 வயதுடைய பையனுடன் ஷப்னம்க்கு காதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ஷப்னம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தௌஃபிக்கிடம் விவாகரத்து பெற்றார்.

பின்னர், ஷப்னம் இந்து மதத்திற்கு மாறி ஷிவானி என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு 18 வயது காதலனை இன்று மணந்து கொண்டார்.

உ.பி., மதமாற்றத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ள ஒரு மாநிலம். வலுக்கட்டாயமாக, ஏமாற்றி அல்லது வேறு எந்த மோசடி வழிகளிலும் மத மாற்றத்தைத் தடை செய்கிறது.

ஆனால் இந்த இவர்களின் விஷயத்தில் இதுவரை எந்த கட்டாயப்படுத்தலும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார். “,

Share.
Leave A Reply

Exit mobile version