,
“தெலுங்கானா மாநிலம், அடிலாபாத் மாவட்டம், குடிஹட்னூரை சேர்ந்தவர் மாருதி. பால் வியாபாரி. இவரது மனைவி கீர்த்தி (வயது 30). தம்பதிக்கு மகேஸ்வரி, காயத்ரி என 2 மகள்களும் பத்ரி என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் மாருதிக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதனால் வீட்டிற்கு எந்த செலவும் செய்யாமல் கள்ளக்காதலிக்கு ஆடம்பரமாக செலவு செய்து வந்தார்.

இவர்களது காதல் விவகாரம் கீர்த்திக்கு தெரிய வந்தது.கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்தது.

கணவர் கள்ளக்காதலை கைவிடாததால் ஊர் பெரியவர்களை கூட்டி பஞ்சாயத்து வைத்தார்.பஞ்சாயத்தில் மாருதி கள்ளக்காதலை கைவிட்டு தனது குடும்பத்தை நல்லபடியாக கவனித்துக் கொள்கிறேன் என உறுதி அளித்தார்.

இருப்பினும் பஞ்சாயத்தில் வைத்து தன்னை அசிங்கப்படுத்திய மனைவியை கொலை செய்ய வேண்டும் என மனதில் வஞ்சகம் வைத்தார்.

கடந்த வாரம் மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மாமியார் வீட்டிற்கு சென்றார். மாருதியும் மாமியார் வீட்டிலேயே தங்கியிருந்தார்.

நேற்று மாமனார், மாமியார் வேலைக்கு சென்றனர். அப்போது வீட்டில் யாரும் இல்லை. கீர்த்தி தெரு குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார்.கத்தியுடன் மனைவியை பின் தொடர்ந்து சென்ற மாருதி நடுரோட்டில் அவரை கீழே தள்ளி கத்தியால் கழுத்தை அறுத்தார்.

கீர்த்தி வலியால் அலறி துடித்தார். கீர்த்தியின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

பொதுமக்கள் வருவதை கண்ட மாருதி அங்கிருந்து தப்பிச் சென்றார்.அங்கிருந்தவர்கள் கீர்த்தியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கீர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள மாருதியை தேடி வருகின்றனர். “,

Share.
Leave A Reply

Exit mobile version