இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று (09) காலை விபத்துக்குள்ளானது.

இலங்கை விமானப்படையின் 7 ஆம் இலக்க படைப்பிரிவுக்குச் சொந்தமான குறித்த ஹெலிகொப்டர் மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கலைந்து செல்லும் அணிவகுப்பின் போதே இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஹெலிகொப்டரில் இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் பயணித்துள்ளனர்.

அதில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version