– பிறை பார்க்கும் மாநாட்டில் தீர்மானம்
இலங்கையில் உள்ள முஸ்லிம்களால் ஹஜ்ஜுப்பெருநாள் எதிர்வரும் 07ஆம் திகதி கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது
ஹிஜ்ரி 1446 துல் ஹிஜ் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகத்திலும் தென்பட்டதை தொடர்ந்து புனித துல் ஹிஜ் மாதத்தை இன்று ஆரம்பிப்பது எனவும் ஹஜ்ஜுப் பெருநாளை 10 ஆம் நாளான (பிறை 10) எதிர்வரும் ஜூன் மாதம் 07ஆம் திகதி (சனிக்கிழமை) இலங்கையில் கொண்டாடுவது எனவும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழுத் தலைவர் மௌலவி எம் .பி .எம் ஹிஷாம் பத்தாஹி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே மேற்படி தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம். ஐ ரிஸ்வி முப்தி, முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் நிஹ்மதுல்லாஹ் நிலோபர் மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நிர்வாக தலைவர் அல்ஹாஜ் தாஹிர் ரஸீன் ஆகியோர் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.