கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக பொலிஸார், கடற்படைப் பிரிவு மற்றும் ரங்கல கடற்படையின் நீச்சல் வீரர்கள் இன்று (27) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழக அறிவியல் பீடத்தின் 21/22 பிரிவின் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஜனிது சாமோத் என்ற மாணவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு துறைமுக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version