“திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான 4-வது நாளிலே லோகேஸ்வரி (24) என்ற புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முஸ்லீம் நகரைச் சேர்ந்த இளம்பெண் லோகேஸ்வரி கடந்த 27-ந்தேதி பன்னீர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து கணவருடன் மறுவீட்டிற்காக தனது தாய் வீட்டிற்கு நேற்று வந்த லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகி 3 நாட்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது. இருசக்கர வாகனம், ஏசி, கூடுதல் நகை கேட்டு தொல்லை கொடுத்ததாக லோகேஸ்வரி குடும்பத்தினர் பன்னீர், அவரது தாய், தந்தை மீது குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணம் ஆன 78 நாட்களில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து பொன்னேரியில் லோகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. “,

Share.
Leave A Reply

Exit mobile version