கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த பெண்ணொருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

கனடாவில் வசித்து வரும் இராஜரட்ணம் சுமதி (வயது 59) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் சென்று கொடிகாமம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் , துவிச்சக்கர வண்டியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானார்.

விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version