இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடைபெற்ற மறைமுக போர் நிறுத்த பேச்சுவாத்தை எந்தவித முடிவுகளும் எடுக்கப்படாமல் முடிவுக்கு வந்ததாக, பாலத்தீன அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
கத்தார் தலைநகர் தோஹாவில் இரண்டு வெவ்வேறு கட்டடங்களில் சுமார் மூன்றரை மணிநேரம் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அதிகாரி தெரிவித்தார்.
கத்தார் மற்றும் எகிப்தை சேர்ந்த மத்தியஸ்தர்கள் மூலம் இரு தரப்பிலிருந்தும் செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஆனால், போர் நிறுத்தத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். இரு தரப்புக்கிடையே உள்ள தடைகள் மற்றும் வேறுபாடுகளை களையும் விதமாக இரு தரப்பின் பிரதிநிதிகள் குழுவுடனும் மத்தியஸ்தர்கள் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபரை வாஷிங்டனில் அமெரிக்க அதிபரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்திக்கவுள்ள நிலையில் இந்த மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
அமெரிக்க அதிபருடன் திங்கட்கிழமை தான் சந்திப்பு நடத்தவுள்ளதாக தெரிவித்த நெதன்யாகு, காஸாவில் பணயக்கைதிகள் விடுவிப்பு மற்றும் போர் நிறுத்தம் தொடர்பாக ஒப்பந்தத்துக்கு வழிவகுக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
இஸ்ரேலின் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என, மத்தியஸ்தர்களுக்கு தான் தெளிவாக அறிவுறுத்தியுள்ளதாக, நெதன்யாகு தெரிவித்தார்.

