யாழ்ப்பாணம், சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (11) மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த இராமச்சந்திரன் ஜெயகாந்தன் (வயது 40) என்ற ஆணாவார்.

தந்தையுடன் வீட்டில் இருந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டவர் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை அச்சுவேலிப் பொலிஸார் நெறிப்படுத்தினர். (

Share.
Leave A Reply

Exit mobile version