“பாங்காக்,தாய்லாந்து நாட்டில் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் அந்த நாட்டில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

புத்தமதம் என்பது ஏராளமான ஆன்மிக கோட்பாடுகள் கொண்டது. அன்பாக வாழ வேண்டும் பிறரை நேசிக்க வேண்டும் இல்லற வாழ்க்கையிலும் கூட கண்ணியங்களை கடைபிடிக்க வேண்டும்,

முற்றிலும் ஆசையை தூக்கி எறிய வேண்டும் என்பது உட்பட ஏராளமான ஒழுக்கங்கள் புத்த மதத்தில் வகுக்கப்பட்டுள்ளன.

முதலில் ஆசையை அடக்க வேண்டும் என்பதே புத்தரின் போதனையாக உள்ளது.இந்த நிலையில் புத்த மத துறவிகள் 9 பேர் ஒரு இளம் பெண்ணுடன் கடந்த பல ஆண்டுகளாக உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

அது மட்டுமல்ல புத்த மத துறவிகளின் தலைமை சாமியார் ஒருவரும் இந்த உல்லாசத்தில் ஈடுபட்டு வந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வழிகாட்ட வேண்டிய தலைமை குருவே இதுபோன்ற செயலில் ஈடுபட்ட சம்பவம் தாய்லாந்து நாட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தாய்லாந்து காவல்துறையினர் ஒரு இளம் பெண்ணை கொக்கி போட்டு பிடித்துள்ளனர்.

அந்தப் பெண்ணின் பெயர் மிஸ் கோல்ப் என தகவல் தெரிவித்துள்ள போலீசார் அந்த பெண் 9 துறவிகளுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக அந்தப் இளம்பெண் பல்வேறு துறவிகளுடன் உல்லாசமாக இருந்து அதனை வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களாக எடுத்துள்ளார்.

அவற்றை வைத்து மிரட்டி 9 புத்தத் துறவிகளிடமிருந்து 100 கோடி ரூபாய் வரை சம்பாதித்துள்ளார்.

இந்த பணத்தை வைத்து ஆன்லைன் சூதாட்டத்திலும் அவர் ஈடுபட்டுள்ளார்.காவல்துறையினர் அவரது வீட்டை சோதனையிட்டபோது 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை கைப்பற்றியுள்ளனர் .

மிஸ்கோல்ப் என்ற அந்த பெண் பயன்படுத்திய சென்போன்களை கைப்பற்றியுள்ளனர் . கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் புத்தமத துறவிகளின் தலைவர் ஒருவர் திடீரென துறவாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதற்கு காரணம் இந்த இளம்பெண் தான் என்று சொல்லப்படுகிறது. மிஸ் கோல்ப் என்ற அந்த பெண் புத்த மதத தலைவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு இதன் பின்னர் தான் 7 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் எனவே பணம் தருமாறும் மிரட்டியுள்ளார்.

அதனை தொடர்ந்து தான் புத்த மத துறவி தலைவர் தனது துறவறத்தை முடித்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது .

இதனிடையே புத்த மதத்தைச் சேர்ந்த 9 துறவிகள் அந்த பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளாக உல்லாசமாக இருந்த வகையில் ரூ.100 கோடி ரூபாய் வரை இழந்துள்ளதாக கூறப்படுகிறது .

இதன் எதிரொலியாக தாய்லாந்து நாட்டு அரசாங்கம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மோசமாக நடந்து கொள்ளும் துறவிகள் குறித்து புகார் அளிக்க சிறப்பு தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.

மேலும் தவறாக நடந்து கொண்ட ஒன்பது துறவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தவறு செய்தது உறுதியாகும் வகையில் அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதனிடையே கடந்த ஜூன் மாதம் 81 துறவிகளுக்கு தாய்லாந்து நாட்டு மன்னர் உயர் பட்டங்களை வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

தற்பொழுது அந்த உத்தரவுகளை தாய்லாந்து நாட்டு அரசாங்கம் வாபஸ் பெற்றுள்ளது. புத்த மத துறவிகள் என்பவர்கள் மிகவும் மரியாதைக்குரியவர்கள் அவர்களை கடவுளின் தூதர்கள் போல் அந்த நாட்டு மக்கள் வணங்கி வந்த நிலையில் தற்போது ஏராளமான துறவிகள் உல்லாச வலையில் சிக்கியதை அடுத்து தாய்லாந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் அந்த இளம்பெண் துறவிகளிடம் ஆசையை காட்டி மீண்டும் மீண்டும் ஓட்டலுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.

இது மட்டுமல்லாமல் அந்த துறவிகள் போதைப் பொருள் பயன்படுத்தினார்களா என்கிற ரீதியிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்பொழுது அந்த இளம் பெண் கொடுத்த தகவலின் பேரில் 9 துறவிகளுக்கு அங்குள்ள போலீசார் வலை வீசி உள்ளனர்.

இந்த துறவிகள் போலீசார் கையில் சிக்கும் போது மேலும் பரபரப்பான தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.”,

Share.
Leave A Reply

Exit mobile version