ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் சொரூபத்தை மதுபோதையில் உடைத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய் யப்பட்ட 8 சந்தேக நபர்களையும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கு மாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றின் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மெலிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் சொரூபத்தை 20 பேர் கொண்ட குழு ஒன்று கடந்த 25 ஆம் திகதியன்று நிறை போதையில் உடைத்து சேதப்படுத்தி யதாக குறித்த ஆலய நிர்வாகத்தி னரால் ஊர்காவற் றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர் கள் என்ற சந்தேகத்தின் பெயரில் தேசிய மக் கள் சக்தி அமைப்பாளர் உள்ள டங்கலாக 8 பேர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

எஞ்சியோர் தப்பிச்சென்றிருந்த நிலையில் பொலிசார் அவர் களை கைதுசெய்யும் நடவடிக் கையில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப் பட்ட 8 பேரையும் விசாரணை செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற் றுறை நீதிவான் முன்னிலை யில் பொலிசார் முன்னிலைப் படுத்தியிருந்தனர்.

இதன்போது ஊர்காவற்றுறை நீதிமன்றின் நீதிவான் குறித்த 8 நபர்களையும் எதிர்வரும் 14 நாள்களுக்கு தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந் தார்.

Share.
Leave A Reply

Exit mobile version